செந்தில் பாலாஜி வழக்கு – ஜூன் 14ல் தீர்ப்பு.!
சென்னை : செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தபட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா வங்கி கணக்கில் டெபாசிட் செய்யபட்ட தொகையை முழுவதுமாக செலவு செய்துள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.