பிரதமராக பொறுப்பேற்றதும் மோடியின் முதல் கையெழுத்து!
மோடி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதன் மூலம் 3-வது முறையாக பிரதமராக நேற்று இரவு பதிவியேற்றார் மோடி.
தற்போது, விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில் தான் பிரதமர் இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்ட அவர், பதவியேற்றவுடன் தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17-வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இது பற்றி பேசிய மோடி, ” விவசாயிகளுக்காக நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், எங்களது அரசு வருங்காலங்களில் முழு அர்ப்பணிப்புடன் விவசாயிகளுக்காகவும், விவசாயத் துறைக்காகவும், விவசாயிகளின் வாழ்வுக்காகபவும் அதிகம் உழைக்கவிருக்கிறோம்”, என்று தெரிவித்துள்ளார்.