இதை செஞ்சுருந்தா கண்டிப்பா ஜெயிச்சிருப்போம்..’ பாபர் அசாம் வேதனை..!
பாபர் அசாம்: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த போட்டியில் ஒன்றாகும். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றிருக்கும்.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன்பின் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் அமைந்தாலும் இறுதி கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியிலும் தோல்வியடைந்திருப்பார்கள். இந்த போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், “நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். ஆனால், பேட்டிங்கின்போது, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தோம். இருந்தாலும், அப்போது அது பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் (Strike Rotate) செய்து விளையாட முடிவு செய்தோம். ஆனால், அங்கு தான் பிரச்னையாக அதிக டாட் பால்களை ஆடி, நாங்களே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டோம். அதிக டாட் பால்களை நாங்கள் எதிர் கொண்டது தான் இந்த போட்டியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்” என கூறி இருந்தார்.