முடிந்தது கோடை விடுமுறை … இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு !!
தமிழகம்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறந்துள்ளன.
வருடம்தோறும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, 1 மாதத்திற்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானதால், பள்ளிகள் ஜூன் 6ம் தேதி அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை முதலில் அறிவித்து இருந்தது.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப அலை வீசியதன் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தது பள்ளிக்கல்வி துறை.
பள்ளி இறுதித்தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டது. புதிய கல்வி ஆண்டில், ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், இன்றைய நாள் ஜூன்-10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒன்றரை மாத கோடை விடுமுறை முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், முதல் நாளில், அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் ரீதியான கவுன்சிலிங் பாடம் வழங்கவும் அந்தந்த பள்ளிகள் ஏற்பாடு செய்து உள்ளன.