மார்ச் மாதம் வரை ரயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாதாம் அப்படியா…!
புதுடில்லி : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம், பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஜூன் 30-ந் தேதிவரையும், பிறகு செப்டம்பர் 30-ந் தேதிவரையும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சேவை கட்டண விலக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை ரயில்வே வாரியம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை கட்டண விலக்கு காரணமாக, ரயில்வேக்கு இதுவரை ரூ.184 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.