இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ஒன்றிணைய வேண்டும்.! -அதிமுக புதிய அணி.

Edappadi Palanisamy - O Panneerselvam

சென்னை: ஓபிஎஸ் அணியில் இருந்து பிரிந்த புகழேந்தி, ஜே.டி.சி.பிரபாகர், கே.சி.பழனிச்சாமி ஆகியோர் தனியாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு என அணியை உருவாக்கியுள்ளனர்.

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் , அக்கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி வென்றிந்த நிலையில், இந்த முறை ஒரு தொகுதி கூட வெற்றிபெறவில்லை. மேலும், ஓபிஎஸ் , பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிட்ட ராமநாதபுரத்தில் கூட தோல்வி கண்டார்.

இந்த தோல்விகளை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த கே.சி.பழனிச்சாமி, ஜேடிசி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் தனியாக பிரிந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற புதிய அணியை உருவாக்கி உள்ளனர்.  இதனை அடுத்து மூவரும் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நாடாளுமன்ற தேர்தல் முடிவு அதிமுக தொண்டர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த சரிவு வரலாற்றில் இதுவரை அதிமுக சந்திக்காத சரிவு. தேர்தல் முடிவுக்கு பிறகு ஒவ்வொரு அதிமுக தொண்டனும், மக்களும் எதிர்பார்ப்பது அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது மட்டுமே.  ஆசைப்படுகின்றனர்.

புகழேந்தி, ஜே.டி.சி.பிரபாகர், நான் (கே.சி.பழனிச்சாமி) எந்த அணியையும் சாராமல் அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி செய்ய உள்ளோம். இனி அதிமுக தலைமை என்பது ஒரு பெரிய தேசிய கட்சியை சார்ந்து இருக்கவும் கூடாது. ஒரு குடும்பத்தின் பின்னணியிலும் இருக்க கூடாது . தப்பு எல்லாம் செய்யுறது தான். அதனை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அம்மா  (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) இருந்த போது சட்டப்பேரவையில் ஒருமுறை கூறுகையில், ” என் எதிரே இருப்பவர்கள் என்னை விமர்சித்ததை விட, என் அருகே இருப்பவர்கள் தான் என்னை அதிகம் விமர்சித்து இருப்பர்.” என்று கூறியுள்ளார். நமக்குள் இருந்த கருத்துவேறுபாட்டை நமக்குள் பேசி முடித்துவிடுவோம் .

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்து அடுத்தடுத்து தோல்வி கண்டது. அதன் பிறகு கட்சி ஒன்று சேர்ந்து, அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிகொண்டது. அதே போல இந்த முறையும், நாடாளுமன்ற தேர்தலை ஒரு படமாக எடுத்துக்கொண்டு அதிமுக ஒன்று சேர வேண்டும். இன்னொரு தோல்வியை அதிமுக தொண்டன் தாங்க மாட்டான். அடுத்தது மீண்டும் தோல்வி என்றால் பொதுமக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளோம். சசிகலாவை சந்தித்து பேச உள்ளோம். ஓபிஎஸ்க்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மீண்டும் செய்தியாளர்களிடம் கூறினார் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கே.சி.பழனிச்சாமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்