பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ரோஹித் விளையாடுவாரா? வெளியான அப்டேட் ..!
ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை போட்டிகள் மொத்தம் 9 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று தான் நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த மைதானம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த மைதானத்தின் தற்போதைய நிலைமை படு மோசமாக இருந்து வருகிறது. இந்த மைதானம் சரியான பந்து வீச்சுக்கு கைகொடுக்கவில்லை என பல கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இந்தியா-அயர்லாந்த் அணிகளின் போட்டியின் போது பலவீரர்கள் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தனர். குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவர் அந்த போட்டியில் அதிரடியாக அரை சதம் கடந்து விளையாடி கொண்டிருக்கையில் பேட்டிங் எதிர் கொள்ளும்போது பந்தானது எதிர்பாராத விதமாக அவருடைய கையில் (Arms)ஐ தாக்கியது.
இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் அந்த போட்டியிலிருந்து ரோகித் சர்மா பாதியில் விலகி இருப்பார். மேலும், இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரரான ரோகித் சர்மா இருக்கிறார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சடைய செய்தது. மேலும், அவரது காயம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.
தற்போது, பந்து தாக்கியதால் அவருக்கு லேசான காயம் தான் எனவும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் விளையாடுவார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நெருங்கிய வட்டாரங்களில் மூலம் தகவல் தெரியவந்திருக்கிறது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.