இன்னும் ITIஇல் சேரவில்லையா.? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ…
தொழிற்பயிற்சி சேர்க்கை : தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது 2024 – 2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.05.2024 முதல் பெறப்பட்டு வருகிறது.
முன்னதாக, விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி இன்றுடன் (07.06.2024) நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை நீட்டித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 13.06.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் itiadmission2024@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் 9499055689 என்கிற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.