ஆம் ஆத்மி – காங். கூட்டணி முறிவு.? இதுதான் I.N.D.I.A கூட்டணியின் முகம்.! பாஜக விமர்சனம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு சில குறிப்பிட்ட அரசியல் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்த்தது போலவே, தற்போது காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுடைய மிக முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளில் டெல்லியில் உள்ள 7 தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்றது. ஆனால், I.N.D.I.A கூட்டணி சார்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒன்றிணைந்து போட்டியிட்டும் ஒரு தொகுதி கூட வெல்ல முடியவில்லை. இந்த விவகாரம் கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி மாநில அமைச்சருமான கோபால் ராய் நேற்று கூறுகையில், வரும் 2025 பிப்ரவரி மாதம் நடைபெறும்டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து களம் காணும் என்றும், மக்களவை தேர்தலுக்காகவே I.N.D.I.A கூட்டணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
கோபால் ராயின் இந்த செய்திகுறிப்பு குறித்து பாஜக தலைவர் ஷேஜாத் பூனவல்லா கூறுகையில், ‘ டெல்லியில் 7 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட I.N.D.I.A கூட்டணி வெல்லாத பிறகு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருக்காது என்று ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கட்சியும் ஆம் ஆத்மி தனித்து களம் காண்கிறது. இது சுயநல நட்பு மட்டுமே. இனி டெல்லியிலும் ஒருவரை ஒருவர் வசைபாடுவர்கள். இதுதான் I.N.D.I.A கூட்டணியின் உண்மையான முகம் என ஷேஜாத் பூனவல்லா கூறியுள்ளார் .