கருத்துக்கணிப்பு மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய ஊழல்..! ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு.!

Default Image

டெல்லி: ஜூன் 1ஆம் தேதி தேர்தல் முடிந்ததும்  மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு செய்தி நிறுவனங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டனர். அதில் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பதை உறுதிப்படுத்திவிட்டன.

தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பின் பின்னர் திங்கள் கிழமை (ஜூன் 3) பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பங்குகள் உயர்ந்தன. இதுகுறித்தும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பற்றியும் பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, முதன்முறையாக, தேர்தல்களின் போது, ​​பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தார்கள். பங்குச் சந்தை உயரப்போகிறது என்று பிரதமர் மூன்று நான்கு முறை கூறினார். ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தை உயரும், மக்கள் வாங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் நேரடியாகக் கூறினார்.

அதன் பிறகு, ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. பாஜகவின் ஆதரவு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகிறது. பின்னர் பங்குச் சந்தை ஜூன் 3 அன்று அனைத்து சாதனைகளையும் முறியடிக்கிறது. ஜூன் 4 அன்று, பங்குச் சந்தை சரிவுக்கு செல்கிறது.

மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழல் குறித்து செபி (SEBI) விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்கள் மீது நாடாளுமன்ற விசாரணை குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்