ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் கிரேவி செய்வது எப்படி?
Paneer recipe-ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்;
- பன்னீர் =200 கிராம்
- எண்ணெய் =இரண்டு ஸ்பூன்
- வெண்ணெய் =ஒரு ஸ்பூன்
- பால் சிறிதளவு
- முந்திரி =15
- மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன்
- மல்லித்தூள்= ஒரு ஸ்பூன்
- சீரகத்தூள் =ஒரு ஸ்பூன்
- கஸ்தூரி மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
- கரம் மசாலா =ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் =கால் ஸ்பூன்
- பட்டை =நான்கு
- கிராம்பு= நான்கு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
- பச்சை மிளகாய்= 3
- வெங்காயம் =ஒன்று
- தக்காளி= இரண்டு
- சர்க்கரை= ஒரு ஸ்பூன்
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து அதில் பன்னீரை நான்கு புறமும் லேசாக வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை தாளிக்கவும் ,வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும், பிறகு இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், காஸ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும். இப்போது இதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இப்போது வெண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வதக்கவும் .பிறகு கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். முந்திரியை சிறிதளவு பால் ஊற்றி மைய அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இதை ஐந்து நிமிடம் மிதமான வேக வைத்து பன்னீரையும் சேர்த்து பன்னீரில் மசாலா படும் வரை ஒரு இரண்டு நிமிடத்திற்கு குறைவான தீயில் வேக வைத்துக் கொள்ளவும்.இப்போது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் மசாலா தயாராகிவிடும்.