நாடாளுமன்றத்தில் ஜூன் 21இல் நம்பிக்கை வாக்கெடுப்பு.?
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. இதற்கான அரசியல் கட்சி ரீதியிலான நடவடிக்கைகளை ஆளும் கட்சி மேற்கொண்டு வருகிறது. அதே போல புதிய அரசு தொடர்பான வேளைகளில் மக்களவை செயலகம் ஈடுபட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமயிலான 17வது அமைச்சாராவை கலைக்க பரிந்துரையானது குடியரசு தலைவரிடம் இருந்து மக்களவை செயலகத்திற்கு கிடைப்பெற்றுள்ளதாகவும், அடுத்தகட்டமாக புதிய எம்பிக்கள் பதவி ஏற்க ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் 17ஆம் தேதி பதவி பிராமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பிறகு, அமைக்கப்பட்ட புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் ஜூன் 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 8ஆம் தேதி பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.