உங்கள் வாயைச் சுற்றி உள்ள கருமை போகணுமா? அப்போ இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

Default Image

Skin care tips-வாயை சுற்றி இருக்கும் கருமை நீங்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை இங்கே காணலாம்.

ஒரு சிலருக்கு வாயைச் சுற்றி மட்டும் கருமை இருக்கும் இது அவர்களின் முக அழகையே கெடுத்து விடும். பெரும்பாலும் இது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கும்  ஹார்மோனல் இம்பேலன்ஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக மெலனின் உற்பத்தி அந்த இடத்தில் மட்டும் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

வாயை சுற்றி இருக்கும்  கருமை நீங்க வீட்டு குறிப்புகள்:

1.கடலை மாவு ஒரு ஸ்பூன், சக்கரை ஒரு ஸ்பூன் ,லெமன் ஒரு ஸ்பூன் இவற்றை கலந்து தடவி வரலாம்.

2.பால் ஒரு ஸ்பூன் ,லெமன் ஒரு ஸ்பூன் இவற்றை சேர்த்து வாயைச் சுற்றி தடவி பத்து நிமிடம் கழித்து மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி சருமத்தை ப்ளீச்சிங் செய்யும். பால் இறந்த செல்களை நீக்கி அந்த இடத்தில் புதிய செல்களை உருவாக்கும்.

3.இதை செய்த பிறகு கடலை மாவு ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன் ,தேன் ஒரு ஸ்பூன் இவற்றை நன்கு கலந்து வாயை சுற்றி போட்டு 20 நிமிடம் கழித்து கழிவு விடவும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரவும். இந்த முறைகளை செய்த பிறகு அந்த இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவி விடவும், இது உங்கள் சருமம் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு வறட்சியாகாமல் பாதுகாக்கிறது.

4.அரிசி மாவு ஒரு ஸ்பூன், தக்காளி ஜூஸ் தேவையான அளவு சேர்த்து கலந்து வாயை சுற்றி  தடவி  20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை கழுவி விடவும்.

5.கடலை மாவு ஒரு ஸ்பூன் ,உருளைக்கிழங்கு சாறு சிறிதளவு எடுத்து இரண்டையும் கலந்து வாயை  சுற்றி தடவி காய்ந்த பிறகு அதை கழுவி வரவும் .

தேங்காய் எண்ணெயை தினமும் குளிப்பதற்கு முன்பு வாயைச் சுற்றி தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால் அதில் உள்ள விட்டமின்கள் விரைவில் கருமையை போக்கும்.

முக்கிய குறிப்பு

எலுமிச்சை சாறை மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும்.

எனவே இதில் உங்கள் சருமத்திற்கு எந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கிறதோ அந்த  குறிப்புகளை பயன்படுத்தி வாயை  சுற்றி உள்ள கருமையை நீக்கிவிடுங்கள் ,இல்லையெனில் அது நாளடைவில் மிகக் கருமையாக காட்சியளித்து முக அழகை கெடுத்து விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்