சுடு தண்ணீர் ஒத்தடம் Vs ஐஸ்கட்டி ஒத்தடம் இதில் எது சிறந்தது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
ஒத்தடம் கொடுக்கும் முறை- ஐஸ் கட்டி ஒத்தடம், சுடு தண்ணீர் ஒத்தடம் இதில் எது சிறந்த வலி நிவாரணி என்பதை இங்கே அறியலாம் .
ஐஸ்கட்டி ஒத்தடம்
ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுக்கும் போது தசை ஆனது சுருங்கப்படும். அதாவது ரத்த நாளங்கள் சுருங்கப்படுகிறது. உதாரணமாக நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அந்த இடத்தில் வந்து குவியும்.
அப்போது நம் உடலானது பலவீனமாகும். அந்த இடத்தில் வீக்கமும் அதிகமாகிக் கொண்டே போகும், இதனை தடுக்க ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதுதான் சிறந்தது. இந்த ஐஸ் கட்டி ஒத்தடத்தை கொடுக்கும் போது அந்த இடத்தில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கிவிடும்.
இது அடிபட்ட உடனே அதாவது ஒரு மணி நேரத்திற்குள் இந்த ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும் .மேலும் வீக்கம், ரத்த காயம் ,சுளுக்கு ,ஒற்றைத் தலைவலி, பல் வலி, தாடை வலி , போன்றவற்றிற்கு அப்போதைய நேரத்திற்கு இந்த சிகிச்சை நல்ல பலனை கொடுக்கும்.
சுடு தண்ணீர் ஒத்தடம்
இந்த சுடுதண்ணீர் ஒத்தடத்தை நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் காயமோ வீக்கமோ இருந்து அது வலி ஏற்படுத்துவது மற்றும் இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு இருந்தால் சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். மேலும் கை, கால் பிடிப்பு ,எலும்பு வலி, இடுப்பு வலி ,தோல் பட்டை வலி போன்ற உடல் வலிகளுக்கும் சுடு தண்ணீர் ஒத்தடம் மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும்.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலி சரியாக இந்த சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு சிலர் ஒற்றை தலைவலிக்கு சுடு தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பார்கள் அவ்வாறு செய்யக்கூடாது இதற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் தான் சிறந்த பலனை கொடுக்கும் .