ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி.! ஜூன் 8இல் பதவியேற்பு.?

Default Image

பிரதமர் மோடி: மக்களவை தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 17வது அமைச்சரவை கலைக்கப்பட உள்ளது. ஜூன் 16ஆம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை பதவி காலம் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், தற்போது டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜினாமா கடிதத்தையும், 17வது அமைச்சரவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார். ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் உடன் கலந்துகொண்டனர்.

இதனை அடுத்து, இன்று நடைபெற உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தை அடுத்து, வரும் ஜூன் 8ஆம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. 18வது அமைச்சரவை பங்கீடு குறித்த முக்கிய ஆலோசனை இன்று பாஜக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்