24 ஆண்டுகள்., ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்.!
ஒடிசா: நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நிறைவு பெற்று முடிந்த நிலையில், இரு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளை வென்று ஆட்சியை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது. அடுத்து நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, தனது முதலமைச்சர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடித்தத்தை புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநர் ரகுபர் தாஸிடம் அவர் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2000 ஆண்டு முதல் பிஜு ஜனதா தளம் 5 முறை ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் 90 நாட்கள் நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.