குட்கா ஊழல்- சிபிஐ ரெய்டு….!திமுக-பாஜக மெகா கூட்டணி…!அதிமுகவிற்கு துரோகம் …!குமுறும் மக்களவை துணை சபாநாயகர்

Default Image

அதிமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கவே அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  தெரிவித்துள்ளார். 

Image result for kutka scam

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி  35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.

Image result for kutka scam

இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Image result for BJP DMK

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இது தொடர்பாக கூறுகையில்,அதிமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கவே அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மு.க.அழகிரி நடத்திய பேரணியை இருட்டடிப்பு செய்யவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. திமுக-பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருவதால் அதிமுகவுக்கு கவலையில்லை.திமுகவானது பாஜகவுடன் உறவை அதிகரித்து வருகிறது  என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்