வெளியானது அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் ..! யாருக்கு எத்தனை இடங்கள்?
மக்களவை தேர்தல்: 543 லோக்சபா இடங்களுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதில், பாஜக 240 இடங்களையும், காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி 37 இடங்களை வென்று மூன்றாவது இடத்திலும், அதன்பின் திரிணாமூல் காங்கிரஸ் (29), திமுக (22), தெலுங்கு தேசம் (16), ஜெடியு (12) மற்றும் சிவசேனா (UBT) (9) ஆகிய இடங்களை பெற்றுள்ளன.
என்.டி.ஏ (NDA) கூட்டணி 292 இடங்களை பெற்று பெரும்பான்மையை வெற்றியை பதிவு செய்தது, அதே சமயம் I.N.D.I.A கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.