தேர்தல் முடிவு பாஜகவுக்கு பின்னடைவு.! ஜனநாயகத்தின் வெற்றி.! கார்கே பேட்டி. 

Default Image

காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் இந்தியா முழுக்க உள்ள தொகுதிகளில் இருந்து வெளியாகி வருகின்றன. இதில் NDA கூட்டணி 293 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய பிரதான காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மிகவும் மோசமான சூழலில் இந்த தேர்தலை சந்தித்ததை நீங்கள் அறிவீர்கள். வருமானவரி கணக்குகள் முதல் பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவது வரை அரசு இயந்திரம் ஒவ்வொரு அடியிலும் தடைகளை உருவாக்கியது. ஆரம்பம் முதல் இறுதி வரை காங்கிரஸின் பிரச்சாரத்திற்கு சாதகமான சூழல் இருந்தது.

பணவீக்கம், வேலையின்மை, விவசாய நெருக்கடி மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைகளை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தோம். பிரதமர் மோடி நடத்திய பிரச்சாரம் வரலாற்றில் நீண்ட காலமாக நினைவில் நிற்கும்.

இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் பொதுமக்களின் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி. இந்த தேர்தலானது பொதுமக்களுக்கும் மோடிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. குறிப்பாக ஆளும் கட்சியான பாஜக ஒரு நபர், ஒரு முகம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பாஜகவின் ஆணவதிற்கு தோல்வி கிடைத்துள்ளது என கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்