கும்பகோணம் ஸ்பெஷல்..கடப்பா செய்வது எப்படி?

Default Image

Kadapa recipe-கும்பகோணத்தில் பிரபலமான கடப்பா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு =75 கிராம்
  • மஞ்சள் தூள்= கால் ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு= 3
  • பச்சை மிளகாய் =நான்கு

தாளிப்பதற்கு தேவையானவை

  • எண்ணெய் = இரண்டு ஸ்பூன்
  • சோம்பு =அரை ஸ்பூன்
  • பட்டை = 2
  • கிராம்பு=4
  • வெங்காயம் =2
  • தக்காளி =ஒன்று

அரைப்பதற்கு தேவையானவை

  • தேங்காய் =ஒரு மூடி அளவு
  • கசகசா= ஒரு ஸ்பூன்
  • பொட்டுக்கடலை= ஒரு ஸ்பூன்
  • பச்சை மிளகாய் =ஐந்து
  • இஞ்சி =ஒரு இன்ச்
  • பூண்டு =4 பள்ளு
  • எலுமிச்சை= ஒரு ஸ்பூன்

moong dhal

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து கழுவி அதை குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் ,  உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் விட்டு உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .பருப்பை நன்றாக மசிந்து கொள்ளவும் .இப்போது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் சோம்பு, கிராம்பு, பட்டை ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

potato (1)

 

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் தேங்காய், கசகசா ,பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் 5 ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தக்காளி வதங்கியவுடன் சேர்த்து கிளறவும்.அதிலே மசிந்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும். [கடப்பாவைக்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது மிக கெட்டியாகவும் இருக்கக் கூடாது].

lemon

இப்போது அதிலே உருளைக்கிழங்கையும் சிறிதாக நறுக்கி சேர்த்து கலந்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.இடையே கலந்து விட்டுக் கொள்ளவும் .கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா தயாராகிவிடும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque
Tamilnadu CM MK Stalin