இந்திய பங்குச்சந்தையில் திடீர் திருப்பம்! சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவு!
பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் நடைபெற்ற நாட்களில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) மற்றும் நிஃப்டி 50 (NSE) புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் தொட்டு அதிரடியாக வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நாளான இன்று சரிவை கண்டுள்ளது.
அதன் படி சென்செக்ஸ் 3,300 புள்ளிகள் சரிந்து 73,146 ஆகவும், நிஃப்டி 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 22,197 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிஜேபி கூட்டணி அதிக இடத்தில் முன்னிலை வகிப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.