தமிழ்நாட்டில் பாஜக நிலை.. ட்ரெண்டாகும் ராகுலின் பழைய வீடியோ.!
மக்களவைத் தேர்தல் : 2022 பிப்ரவரி 2ம் தேதி நாடாளுமன்றத்தில் “ஒருகாலும் தமிழகத்தை உங்களால் ஆள முடியாது” என்று ராகுல் காந்தி பேசிய வசனம் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பலரும் சமுக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டோரியாக பகிர்ந்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அதிமுக 1 இடத்திலும், பாஜக 1 இடம் மட்டுமே பிடித்திருக்கிறது.
அந்த வகையில், பாஜக கூட்டணியான பாமக வேட்பாளரை தவிர, தமிழ்நாட்டில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி பாஜகவைப் பார்த்து பேசிய பழைய வீடியோவை திமுகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ராகுல் காந்தி கர்ஜித்த கூற்று மீண்டுமொருமுறை நிரூபணம் ஆனது..😎💥
பாஜக இல்லாத தமிழ்நாடு🔥🔥#ElectionResults pic.twitter.com/XJqv6xklA3
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) June 4, 2024