தமிழ்நாட்டில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு.! முழு விவரம்…
மக்களவை தேர்தல் : காலை 12 மணி முன்னணி நிலவரப்படி, 38 இடங்களில் திமுக கூட்டணியானது தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், அதிமுக 1 இடத்திலும், பாஜக 1 இடம் மட்டுமே உள்ளது.
அதுவும், தருமபுரி தொகுதியான பாஜக கூட்டணியான பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 5ஆம் சுற்று நிறைவடைந்த நிலையிலும், திமுக வேட்பாளர் மணியை விட 20,421 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பாஜக கூட்டணியான பாமக வேட்பாளரை தவிர, தமிழ்நாட்டில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி, பின்வருமாறு பார்க்கவும்…
தமிழ்நாட்டில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு :
- தமிழிசை சௌந்தரராஜன் – தென் சென்னை (35537 வாக்குகள்)
- எல்.முருகன் – நீலகிரி (99429 வாக்குகள்)
- அண்ணாமலை – கோவை (43994 வாக்குகள்)
- நயினார் நாகேந்திரன் – நெல்லை (98974 வாக்குகள்)
- பொன்.ராதாகிருஷ்ணன் – கன்னியாகுமரி (62081 வாக்குகள்)
- ராதிகா சரத்குமார் – விருதுநகர் (49726 வாக்குகள்)