திருப்பூர், நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை ..!
மக்களவை தேர்தல் : நாடளுமன்ற தேர்தல் வாக்கு எணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக 39 நாடாளுமன்ற தொகுதிகளில், திமுக கூட்டணி முன்னிலை பெற்று வரும் நிலையில், திருப்பூர் மற்றும் நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி, திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட கே.சுப்பிரமணியன் 1,20,290 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவருக்கு அடுத்த படியாக அதிமுக சார்பாக போட்டியிட்ட பி.அருணாச்சலம் 88,299 வாக்குகள் பெற்று 31,991 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். மேலும், நாகையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வி.செல்வராஜ் 1,39,793 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த படியாக அதிமுக சார்பாக போட்டியிட்ட சூர்சித் ஷங்கர் 76,558 வாக்குகள் பெற்று 63,235 வாக்குகள் பின்னடைவில் இருந்து வருகிறார்.