தேர்தல் ரிசல்ட் அப்டேட்.! மதுரை, திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் முன்னிலை.!
மக்களவை தேர்தல்: திமுக கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மதுரை தொகுதியிலும், சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
காலை 9.30 மணி நிலவரப்படி திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் 17 ஆயிரம் வாக்குகள் பெற்று சுமார் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் 4000 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சரவணனை விட 500 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.