தபால் வாக்குகளில் டி.ஆர்.பாலு முன்னிலை!
543 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு வருகிறது. அதைப்போல, தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதல்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக சார்பில் போட்டியிட்டுள்ள டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் இருக்கிறார். நாம் தமிழர், தமாகா வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.