தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் கேதார் ஜாதவ்!

Default Image

கேதார் ஜாதவ் : கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர்16ம் தேதி அன்று இந்திய கிரிக்கெட் அணிக்காக கேதர் ஜாதவ்  இலங்கைக்கு எதிரான சர்வேதச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதே போல அடுத்த ஆண்டான 2015-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது சர்வதேச டி20 போட்டியிலும் அறிமுகமானார்.

இவர் மொத்தமாக 73 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1389 ரன்களை எடுத்துள்ளார். அதில் 6 அரை சதங்களும், 2 சதங்களும் அடங்கும். மேலும், 9 சர்வேதச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 122 ரன்களை எடுத்து, ஒரு அரை சதத்தையும் எடுத்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மட்டும் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியில் சரியாக விளையாடததன் காரணமாக இவர் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

‘தல’ தோனி தனது ஓய்வை அறிவித்தது போல தற்போது அவரது ஸ்டைலில் இவரும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதாவது, தோனி தான் இந்திய அணிக்காக விளையாடிய மொத்த நேரத்தையும் பதிவிட்டு நன்றி கூறி ஓய்வை அறிவித்திருந்தார்.

அதே போல கேதர் ஜாதவும் தனது X தள பக்கத்தில்,” எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 1500 மணி நேரம் முழுவதும் அன்பும், ஆதரவும் அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி, அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கருதி கொள்ளுங்கள்”, என பதிவிட்டு தோனி ஸ்டைலில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்