காசா போர் : இஸ்ரேலியர்கள் நுழைய தடை…மாலத்தீவு அரசு முடிவு!

Default Image

காசாவில் நடந்து வரும் போரால் மாலத்தீவுகளில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பாஸ்போர்ட்டை கொண்டவர்களுக்கு நாட்டு நுழைவைத் தடை செய்வதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.

மாலத்தீவின் அதிபர் அலுவலகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நுழைவைத் தடுக்க சட்ட மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்ததாகவும், இந்த செயல்முறையை கண்காணிக்க ஒரு துணைக்குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது.

அதிபர் முகமது முவிசு பாலஸ்தீன மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய சிறப்பு தூதரை நியமித்து, நிதி திரட்டும் முயற்சியை ஆரம்பிப்பார் எனவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஓரன் மார்மோர்ஸ்டெயின், இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், அங்கு உள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு, மாலத்தீவுக்கு சுமார் 11,000 இஸ்ரேலியர்கள் வந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் 0.6% ஆகும். மாலத்தீவுக்கு இந்த ஆண்டில் முதல் 4  மாதங்களில் வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்