இந்தியன் டாய்லெட் ,வெஸ்டன் டாய்லெட் இதில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Default Image

கழிப்பறைகள் -நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகை கழிப்பறைகள் சிறந்தது  என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை அனைவரது இல்லங்களிலும் இன்றியமையாததாக உள்ளது. அதனால்தான் அரசே அதற்கான மானியத்தை வழங்கி அனைவருக்கும் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் மேற்கத்திய நாடுகளின் கழிப்பறை தான் விரும்புகிறார்கள்.

இந்தியன் கழிப்பறை:

இந்திய கழிப்பறை குந்துதல்  முறையில் மலம் கழிப்பதாக அமைந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் உடற்பயிற்சி செய்த பலனையும் பெறலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் கை கால்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் குடல் ,வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த குந்துதல்  முறை சிறந்த ஆசனமும் கூட. இந்த  முறையில் அமரும்  போது செரிமானம் மேம்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் இந்திய கழிப்பறை பயன்படுத்தும் போது சுகப்பிரசவம் நடைபெறவும் வழி வகிக்கிறது.

நம்முடைய பெருங்குடலில் உள்ள மலம் சுத்தமாக வெளியேற்ற இந்த கழிப்பறை உதவுகிறது. இதனால் குடல் சுத்தம் ஆவதோடு குடல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கும்.மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது .

வெஸ்டர்ன் டாய்லெட்:

இந்த முறை கழிப்பறையானது அமர்வதற்கு வசதியாகவும் மாடனாகவும் இருப்பதால் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த கழிப்பறையால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது இது மலச்சிக்கலை எளிதாக ஏற்படுத்தக் கூடியது.

மேலும் இந்த கழிப்பறையை பயன்படுத்துவர்கள் காகிதம் பயன்படுத்துகின்றனர். இந்திய கழிப்பறையுடன் ஒப்பிடும்போது அதிக அளவு தண்ணீர் செலவாகிறது. மேலும் எளிதில்  சிறுநீர் தொற்று ஏற்படுகிறது ஏனென்றால் கழிப்பறையுடன் நம்முடைய உடலும் நேரடி தொடர்பு இருப்பதால் தொற்று எளிதில் ஏற்படும்.

வெஸ்டன் டாய்லெட்டில் குழந்தைகள் விழும் அபாயமும் இருக்கிறது .அதனால் யாரேனும் துணையுடன் தான் இந்த கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். இது வயதானவர்கள் மற்றும் சிசேரியன் செய்தவர்களுக்கு சற்று வசதியாக இருக்கும்.

ஆனாலும் நம்முடைய ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்த்தோமேயானால் இந்திய கழிப்பறை தான் சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir