எப்பவும் ஜாலி தான்! நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்..வைரலாகும் வீடியோ!!

Default Image

சிவகார்த்திகேயன் : சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் இருந்தே சுற்றி இருப்பவர்களை எதாவது செய்து சிரிக்க வைத்து கொண்டு மிகவும் கலகப்பாக இருப்பார் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

இப்போதும்கூட, அவர் எதாவது விருது நிகழ்ச்சிகளில் கொண்டார் என்றாலும் கலகலப்பாக இருப்பார். இப்போது மட்டுமில்லை நடிக்க வருவதற்கு அதாவது சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பு கல்லூரி படித்துக்கொண்டு இருந்த சமயத்தில் தனது நண்பர்களுடனும் மிகவும் ஜாலியாக லூட்டி அடித்து கொண்டு இருந்துள்ளார். அவருடைய கலகலப்பான பேச்சு இங்கு இருந்துதான் வந்து இருக்கும் என்று கூட கூறலாம்.

அந்த அளவுக்கு ஜாலியாக சிவகார்த்திகேயன் கல்லூரி படித்து கொண்டு இருந்த சமயத்தில் தனது நண்பர்களுடன் அரட்டை அடித்த  பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சிவகார்த்திகேயன் நண்பர்கள் ஒவ்வொரின் பெயரை சொல்ல சொல்ல காட்டப்படுகிறது. அப்போது சிவகார்த்திகேயனும் கையை கட்டிக்கொண்டு வருகிறார். வைரலாகி வரும் வீடியோவை பார்த்த பலரும் சிவகார்திகேயனா இது? என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இதோ அந்த அழகிய பழைய வீடியோ…

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தையும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 23-வது படத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்