அரை மணி நேரத்தில் தெறிக்க விட்ட பேட்ட….!!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட, இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தொடங்கப்பட்டது.

இப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்கவுள்ளார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மெகா ஆகாஷ் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

நேற்று ரஜினியின் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்ததும், 23 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர். மேலும் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்