இவர் பந்து வீச்சு இந்திய அணியை சமநிலையில் வைத்திருக்கும்- சுனில் கவாஸ்கர்

Default Image

சுனில் கவாஸ்கர் : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (ஜூன்-2) தொடங்கவிருக்கும் நிலையில் இன்றைய பயிற்சி போட்டியில் வங்கதேச அணியுடன், இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் 15 வீரர்களில், எந்த 11 வீரர்கள் அடுத்தகட்டமாக லீக் சுற்றுகளில் விளையாடுவார்கள் என்பது இன்றைய பயிற்சி போட்டியில் தெரிந்துவிடும்.

தற்போது, இந்தியா அணியின் பந்து வீச்சை குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான சுனில் கவாஸ்கர் ‘டைனிக் ஜாக்ரன்’ என்று பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார்.

அவர் பேசுகையில், “வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் சமநிலையான பந்துவீச்சு தாக்குதல் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது, இதனால் இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடியும், அவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் ஒரு பேக்-அப் (Back Up) வேகப்பந்து வீச்சாளராக கொண்டு செல்ல வேண்டும்.

இது இந்திய அணியின் பந்து வீச்சை சமநிலையில் வைத்திருக்ககூடும்.மேலும், அனுபவமும் இளமையும் கலந்த ஒரு நல்ல அணி இது தான் என்று நான் நம்புகிறேன். ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யாகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஷிவம் துபே போன்ற இளம் வீரர்கள் அணியை மேலும் பலப்படுத்துகிறார்கள்.

அரை இறுதி போட்டிக்கு வரும் 4 அணிகள் யார் என்று என்னால் கூற முடியாது. ஏன் என்றால் எனது பார்வையில் அனைத்து அணிகளும் சமநிலையுடன் காணப்படுகின்றன”, என்று அவர் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்