சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

Default Image

மும்பை: கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி வரை சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி மின்னஞ்சல் முகவரி மூலமாக மிரட்டல் மெயில் வந்தது. அதனை தொடர்ந்து பயணிகள் அவசரகதவு வழியாக வெளியேற்றப்பட்டு விமானம் முழுக்க வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது. இறுதியில் மிரட்டல் செய்தி போலி என தெரிவிக்கப்பட்டது

தற்போது அதே போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்று சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அடுத்து, விமானம் 6E 5314 ரக விமானம் மும்பை விமானநிலையத்தில் காலை 8.45 மணிக்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு ஒரு தனிப்படுத்தப்பட்ட பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டது.

அதன் பிறகு மிரட்டல் செய்தி குறிப்பின்படி , விமானத்தின் கழிவறை பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு அவர்களிடமும் சோதனை நடைபெற்று வந்தது.

பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு விமானம் மீண்டும் விமான நிலைய பயன்பாட்டு டெர்மினல் பகுதியில் நிறுத்தப்படும் என இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்