இறுதிகட்ட தேர்தல்.! இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை இன்று டெல்லியில்…

Default Image

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் இன்று 57 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவுடன் முழுதாக நிறைவுபெறுகிறது. தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் முடிவுகளை கணித்து அதற்கு ஏற்றவாறு தங்கள் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

காங்கிரஸ்,திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்துள்ள I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகின்றனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மம்தா பேனர்ஜி (TMC), தேஜஸ்வி யாதவ் (RJD) ஆகியோர் பங்கேற்பார்களா அல்லது அவர்கள் சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்பார்களா என்பது இன்னும் குறிப்பிடடவில்லை. இதில் மம்தா பங்கேற்கவில்லை என்பதை முன்னரே தெரிவித்து விட்டார்.

அதே போல, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், பக்வந்த் மான், பிரகாஷ் கரத், டி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.

6 கட்ட மக்களவை தேர்தல் நிறைவு பெற்றுள்ளதால், அதன் வெற்றிவாய்ப்புகள், 7ஆம் கட்ட தேர்தல் கணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் விவாதிக்கப்படலாம் என்றும், இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று இந்தியா கூட்டணியில் அறிவிக்கப்படாததால் அதுபற்றிய ஆலோசனையும் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்