சாதி கொலைகளை தடுக்க மாற்றம் தேவை – மாரி செல்வராஜ் பேச்சு!
மாரி செல்வராஜ்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் மாரி செல்வராஜ் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது சாதி கொலைகளை தடுக்க அனைவரும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இது குறித்து பேசிய மாரிசெல்வராஜ் ” அடிப்டையாகவே நிறைய மாற்றங்கள் என்பது இப்போது தேவைப்படுகிறது. இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். உடனே இது போன்ற சம்பவங்களை தடுத்தி நிறுத்தி மாற்ற முடியாது. காலம் காலமாக மனதிற்குள் ஆழமாக தங்கி ஒரு விஷயமாக இது இருக்கிறது.
எனவே, ரொம்பவே கஷ்டப்பட்டு தான் இதனை எல்லாம் மாற்ற வேண்டும். உடனே ஒரு நாளில் மாற்ற முடியும் சூழலில் இல்லை. ஏனென்றால், இது உளவியலாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாம் சாதாரணமாக சொல்கிறோம் ஒரு சட்டம் போட்டால் சுலபமாக மாற்றலாம் என்று. ஆனால், அது முடியாது. உளவியல் ரீதியாக அனைத்து பொதுமக்கள் மனதிலும் சாதி உள்ளது. எல்லாரும் சேர்ந்து நுணுக்கமாக அரசியல் எல்லாம் சேர்ந்து அழுத்தமான ஒரு வேலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கு.
அப்படி செய்தால் மட்டும் தான் அடுத்த தலைமுறை ஒரு புரிதலுக்கு உண்டாகும்” எனவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து ஓடிடி தளங்களில் படம் வெளியாவது பற்றியும் பேசிய மாரி செல்வராஜ் ” ஓடிடி தளங்களில் படம் வருகிறது என்பதால் தியேட்டருக்கு மக்கள் வரும் எண்ணிக்கை குறையவே குறையாது. ஒரு வீட்டிற்குள் பூஜை அறை இருக்கிறது. எனவே, பூஜை அறை இருப்பதால் யாரும் கோவிலுக்கு செல்லாமல் இருக்கப்போவது இல்லை. அதைப்போல தான் எப்போதுமே மக்கள் திரையரங்குகளுக்கு வந்துகொண்டு தான் இருப்பார்கள்” எனவும் இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியுள்ளார்.