பிரதமர் நரேந்திர மோடியுடன் சூப்பர் ஸ்டார் திடீர் சந்திப்பு…!அவங்களோட சேர நீங்க என்ன முட்டாளா சூப்பர்ஸ்டார் …!போட்டு தாக்கிய எதிர்க்கட்சி தலைவர்…!
கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா நடிகர் மோகன்லால் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ரஜினிக்கு உள்ளது போல் நடிகர் மோகன்லாலுக்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். ரஜினி ஏற்கனவே தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்துவிட்டார்.
நடிகர் மோகன்லாலை அடுத்த வருடம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் கட்சி சார்பில் போட்டியிடவைக்க பாஜக முயன்றுவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய விருது வென்ற நடிகரான மோகன்லாலுக்கு தற்போது 58 வயதாகிறது. அவரை திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு போட்டியாக களமிறங்க பாஜக திட்டமிட்டு வருகிறதாம். அது நடந்தால் பிஜேபிக்கு ஆதரவு அதிகரிக்கும் என அவர்கள் நாமெக்கிறார்கள்.
சமீபத்தில் நரேந்திர மோடியை மோகன்லால் நேரில் சந்தித்து பேசிய பிறகு நடிகரின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு, எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா இதுகுறித்து கருத்து கூறியபோது, ‘நடிகர் மோகன்லால் பா.ஜ.கவில் இணையும் முட்டாள்தனமான காரியத்தை செய்ய மாட்டா.மேலும் பல்வேறு மக்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் மோகன்லால். அவர் கேரள மக்களிடையே நல்ல பிரபலமானவர். சமூகத்தால் மதிக்கப்படுபவர். அவர் பா.ஜ.கவில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது போன்ற முட்டாள்தனமான தவற்றை செய்யமாட்டார் என நான் நினைக்கிறேன்” என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.