விமர்சனங்களை பற்றி எனக்கு கவலை இல்லை ..நான் இப்படி தான் இருப்பேன்! – ரியான் பராக்

Riyan Parag

ரியான் பராக் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரராக விளையாடி வரும் ரியான் பராக் சமீபத்தில் பிடிஐக்கு (PTI) அளித்த பேட்டியை, ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN Info) வெளியிட்டுள்ளனர்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரியான் பராக் இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 149.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 573 ரன்களை எடுத்துள்ளார், அதில் 4 அரை சதங்களும் அடங்கும். மேலும், லீக் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் பிளே-ஆஃப் சுற்றில் பல சவால்களை எதிர்கொண்டார்.

இதனால் லீக் போட்டிகளில் செயலாற்றிய அளவிற்கு பிளே-ஆஃப் சுற்றில் அந்த அளவிற்கு செயல்பட தவறினார். அதிலும் குறிப்பாக குவாலிபயர்-2 ம் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது யூட்யூப் தேடல் ஹிஸ்டரியால் உண்டான சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் பிடிஐ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், “எனது பேட்டிங் குறித்து உண்மையில் எனக்கே திருப்தி ஏற்படவில்லை. இது ஒரு நல்ல ஐபிஎல் சீசனாக எனக்கு அமைந்தாலும், சில போட்டிகளை ராஜஸ்தான் அணிக்காக முடித்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினேன்.

இதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் நான் விளையாட வேண்டும் என்ற பாடத்தை கற்று கொண்டேன். கிரிக்கெட் என்பதே குழுவாக இணைந்து விளையாடி வெல்வது தான், நானும், சஞ்சு சாம்சனும் மட்டுமே ரன்களை சேர்ப்பதால் அணியால் வெற்றிபெற முடியாது.

மேலும், நாங்கள் அடிக்கும் ரன்கள் எல்லாம் எங்கள் அணிக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் சில போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இருப்ப்பினும், இந்த தொடரில் நம்பர் 3ல் முடித்தது மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணியில் நான் விளையாட மாட்டேன் என்று பலரும் கூறி வந்தார்கள்.

ஆனால் இப்போது ரியான் பராக்கை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவேன் என்று எனக்கும் தெரியும். அதற்கு 6 மாதமோ அல்லது ஒரு ஆண்டோ ஆகலாம்” என்று கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்