பாஜக மக்களை தவறாக வழிநடத்துகிறது.! கார்கே கடும் குற்றசாட்டு.!

Mallikarjun kharge - pm modi

புது டெல்லி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, மதம் மற்றும் பிரிவினைவாத விவகாரங்களில் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 15 நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலையுயர்வை பற்றிப் பேசவில்லை, ஆனால் “மோடி” 758 முறை, “காங்கிரஸ்” 232 முறை, “இந்தியா கூட்டணி” 573 முறை குறிப்பிடப்பட்டதாக அவர் கூறினார். இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “மக்களவை தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் பிரிவினைவாத பேச்சுக்களைப் பொருட்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் 421 முறை மந்திர்-மசூதி பற்றியும், 224 முறை முஸ்லீம் பற்றியும், சிறுபான்மையினர் பற்றியும் பேசினார். ஆனால், தேர்தல் ஆணையம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கார்கே கூறினார்.மேலும் அவர் பேசுகையில், “மக்களவை தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்டப் பிரச்சாரம் இன்று (மே 30) மாலையுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில், ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றியுள்ளனர்.

மதம், குலம், பிரதேசம், பாலினம், மொழி போன்ற வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாக நிற்கிறார்கள்,” என்று அவர் கூறினார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் மதம் மற்றும் பிரிவினைவாத விவகாரங்களில் மக்களை தவறாக வழிநடத்த பல முயற்சிகளை எடுத்தனர். மக்கள் முக்கிய பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்தனர். 2024 ஜூன் 4 அன்று, மக்கள் ஒரு புதிய மாற்று அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது.

இந்தியா கூட்டணி முழு பெரும்பான்மையுடன் அரசை அமைக்கும், அனைவரையும் கொண்டு செல்லும் அரசை உருவாக்குவோம்,” என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி எப்போதும் அகிம்சையில் நம்பிக்கை வைத்தவர் என்றும், யாரையும் வெறுக்கவில்லை என்றும் கூறினார். ஆனால், பிரதமர் மோடியின் சொற்கள் வெறுப்பை பிரதிபலிக்கின்றன என்று அவர் கார்கே குற்றம்சாட்டினார். மன்மோகன் சிங் பிரதமராகவும், சோனியா காந்தி (யுபிஏ) தலைவராகவும் இருந்த போது, ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை கொண்டு வந்தோம் என்று கார்கே கூறினார்.

ஆனால், பிரதமர் மோடி விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டினார். “நாங்கள் வேலைவாய்ப்பின்மை, விலையுயர்வு மற்றும் பொருளாதார சமதளத்தின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடினோம், மக்களின் முழு ஆதரவைப் பெற்றோம். ஜனநாயகத்தை பாதுகாக்க துணிந்து நிற்கும் என் சகாக்களுக்கு வாழ்த்துக்கள்” என்றும் கூறினார்.

மேலும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கூற்றை மேற்கோள்காட்டி, மதத்தில் ‘பக்தி’ பரமபதம் அடைய ஒரு பாதையாக இருக்கலாம், ஆனால் அரசியலில் ‘பக்தி’ அல்லது அரசியல் வீர வழிபாடு நிச்சயமாக அழிவிற்கு வழிவகுக்கும் என்பது உறுதி என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்