தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஆரஞ்சு- மஞ்சள் எச்சரிக்கை.! தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்யும்.!

Southwest Monsoon in Kerala

தென்மேற்கு பருவமழை : கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று (30-05-2024) துவங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கேரளாவில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு- மஞ்சள் அலர்ட்

வழக்கத்தைவிட சீக்கிரமாக தொடங்கிய இந்த தென்மேற்கு பருவமழையால், இந்த ஆண்டு கேரளாவில் அதிகமாக மழை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு , மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உட்பட 14 மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

3 நாட்கள் கனமழை

இதில், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1ம் தேதி முதல் 2ம் தேதி வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதனை தொடர்ந்து, 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்