என்ன பார்த்து தான் கெட்டு போகிறார்களா ..எனக்கு நீதி வேண்டும்? டிடிஎஃப் வாசன் ஆதங்கம்!!

TTF Vasan

டிடிஎஃப் வாசன் : உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதால் கைதான டிடிஎஃப் வாசனை தற்போது மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக  அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், இவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி செல்லுதல், கொலை முயற்சி போன்ற 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிடிஎப் வாசனை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இவரை இன்று காவல் துறையினர் மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் பத்திரிக்கையாளர்களை பார்த்து,”என்னை பார்த்து தான் மக்கள் கெட்டுப்போகிறார்கள்? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது.

அதனால் கெட்டுப்போவதில்லையா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம்தானே. எத்தனை பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றார்கள்?. குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என்ற வழக்கு?.. ஏன்.. எனக்கு மட்டும் கொலை வழக்கு? எனக்கு நீதி வேண்டும்..” என கேள்வி எழுப்பி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்