சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : தொடர்ந்து 2 நாளாக உச்சம் கண்டு வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, ரூ.54 ஆயிரத்திற்கு மேல் சென்ற தங்கம் விலை இன்று ரூ.54 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (30-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால், நேற்று 54,200க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.53,840க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.6,730க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.1.50 உயர்ந்த நிலையில், இன்று ரூ.1.20 குறைந்து ரூ.101க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (29-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை ஆனது. நேற்று முன் தினம் ரூ.6,740ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று ரூ.35 அதிகரித்து ரூ.6775ஆக விற்பனையானது. அதே வேலையில், வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.102.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,02,200 ஆகவும் விற்பனை செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.