‘நான் நலமுடன் திரும்பி வருவேன் ..’! அறுவை சிகிச்சைக்கு முன் வீடியோ வெளியிட்ட வைகோ!

Vaiko

வைகோ :  அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கடந்த மே 25-ம் தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்த போது அன்றிரவு கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு வலது தோள்ப்பட்டையில் சிறிதளவு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை உடனடியாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். அதனால், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரபட்டார். மேலும், அவர் நேற்று ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அவரது மகன் துரை வைகோ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தனது உடல் நிலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் இன்று அவரது மகன் துறை வைகோ X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “அன்பு உள்ளம் கொண்ட தமிழ் பெரு மக்களே.. தமிழகத்தில் பொது ஊழியம் செய்கின்ற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7000 கி.மீ. நடந்து இருக்கிறேன், ஆனால் கீழே விழுந்ததில்லை.

இப்போது நான்கு நாட்களுக்கு முன்னர் நெல்லைக்கு சென்றிருந்த இடத்தில், தங்கியிருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்போது இடதுபுறமாக சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அல்லது முதுகில் அடிபட்டு இருந்தால் இயங்க முடியாமல் போயிருப்பேன்.

இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து விட்டது, எலும்பு சிறிய அளவில் கீறியுள்ளது. தற்போது உங்களுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நான் நன்றாக இருக்கிறேன், முழு ஆரோக்கியத்துடன் வருவேன். நான் முன்பு போல் இயங்க முடியுமா என்று மட்டும் யாரும் சந்தேகம் பட வேண்டாம்.

நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவர் என்பதை கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே, நம்முடைய தோழர்கள், பொதுவாழ்வில் அக்கறை உடையவர்கள் எல்லோர்க்கும் சொல்லிக்கொள்வது இந்த நாட்டில் மேலும் தமிழ்நாட்டிற்கு செய்யவேண்டிய சேவைகளை செய்வதசேவைகளை செய்வதற்கு காத்து கொண்டிருக்கும் வைகோ முழு நலத்துடன் பரிபூரண ஆரோக்கியத்துடன் வருவேன் என்பதையும் எனக்காக கவலைப்படுகிற உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்