பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் தேவன் குமார் காலமானார்.!

Devan Kumar

தேவன் குமார் : கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்த தேவன் குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மே 27ம் தேதி) காலமானார்.

மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரிச்சயமான நண்பரான அவர், பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று தேவன் குமார் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை ஏவிஎம் மயானத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பான ‘நாயகி ‘என்ற மெகா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது நடிப்பைத் தொடங்கிய அவர், ஹீரோக்களுக்கும் சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்தார். கடைசியாக, கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த மாஸ்டர் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்