LED லைட்டில் இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

LED LIGHT

LED LIGHT– LED லைட் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

Light Emitting diode-LED

தற்போது பெரும்பாலான மக்கள் LED  பல்ப் மற்றும் டிவியை பயன்படுத்தி வருகின்றனர். இது  மின்சாரத்தை மிச்சப்படுத்த சிறந்த வழியாக இருக்கலாம் ஆனால் இதனால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் மற்றும்  கண்களை  பாதிப்பிற்கும் உள்ளாக்குகிறது.

இந்த LED  தொழில்நுட்பம்  மின் விளக்குகளில் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் லேப்டாப், டிவி ,செல்போன், குளிர்சாதன பெட்டி ட்ராபிக் சிக்னல், எமர்ஜென்சி லைட், டார்ச் லைட் என பல பொருள்களில் உள்ளது.

இதிலிருந்து வெளிப்படும் அக சிகப்பு கதிர்கள் மற்றும் ப்ளூ லைட்  கண்களை பாதிக்கிறது. குறிப்பாக நீல நிற விளக்குகள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது ஏனென்றால் LED லைட்  ,  டிவி ,செல்போன் ,கணினியில் தான்  உள்ளது. இதை தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம்.ஆனால் வெள்ளை நிற LED  விளக்குகளினால் எந்த பாதிப்பும் இல்லை.

LED லைட்டின் பக்கவிளைவுகள் :

இரவில் நம் உடலில் உள்ள ஜீரண மண்டலம் சரியாக இயங்க என்சைம் அதிகம் சுரக்க வேண்டும்.ஏனென்றால் இரவில் நம் வேலை செய்வதில்லை . இதற்கு மெலடோனின் ஹார்மோன் சரியாக உற்பத்தியாக வேண்டும்.

இந்த மெலடோனினால் நம் உடலில் அலர்ஜி, வீக்கம், புற்றுநோய் வராமல் இருக்க, நரம்பு நன்றாக இயங்க, தூக்கம் நன்றாக வர தேவைப்படுகிறது. இது மதிய வேலையில் தன்னுடைய உற்பத்தியை ஆரம்பித்து இரவில் அதிகம் உற்பத்தியாகும்.

இதுதான் இயற்கை இந்த இயற்கையை மாற்றி அமைக்கும் ஒரு விஷயம் தான் led லைட். இந்த பாதிப்புகள் அனைவருக்குமே வரும் என கூறி விட முடியாது .இரவில் பணி புரிபவர்களுக்கு வரும் அபாயம் உள்ளது என்றும் இதனால் குழந்தையின்மை, இதய நோய் ,சக்கர நோய், மார்பக புற்றுநோய், பிராஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆராய்ச்சியின் கூற்றுப்படி சர்க்கரை நோய் வர காரணமாய் இருக்கிறது, ஏனென்றால் இந்தச் செயற்கை ஒளியால் ஹார்மோனின்  செயல்பாடுகள் பாதிப்படைகிறது. இது நீரிழிவு நோயை அதிகப்படுத்தும் என்றும் 28% வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும்  சீனாவில் ஹாங்காங்கில் உள்ள[Shanghai jiao tong  university]என்ற  மருத்துவ  ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் ஆய்வின் மூலம் கூறுகின்றனர் .

இந்த LED  விளக்குகளால் மனச்சோர்வு, டிப்ரஷன் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.9 மணிக்கு மேல்  டிவி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் மெலடோனின் உற்பத்தி பாதிப்படையும்.இதனால் மேலே கூறியுள்ள படி பல வியாதிகள் வரலாம்.

மேலும் முடிந்தவரை இரவு நேர பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். என்னதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் நம்முடைய உடல் நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
orange alert tn
CSK Squad
Red Alert TN
Fengal Cyclone
Aavin milk - Heavy rain
Rohini (13) (1)