குழந்தைகள் விரும்பும் உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது எப்படி?
Potato recipe -உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
- உருளைக்கிழங்கு= கால் கிலோ
- பெரிய வெங்காயம்= 2
- கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
- பிரட்= ஆறு
- மிளகாய்த்தூள் =அரை ஸ்பூன்
- மல்லித்தூள்= கால் ஸ்பூன்
- கரம் மசாலா =அரை ஸ்பூன்
- மிளகுத்தூள்= கால் ஸ்பூன்
- மைதா=3 ஸ்பூன்
- எண்ணெய் = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை அவித்து துருவி எடுத்துக் கொள்ளவும். அதில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் , கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் பிரட்டை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இப்போது கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு கப்பில் மைதா மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் .அந்த உருண்டைகளை இந்த மாவில் நனைத்து மீதமுள்ள பிரட்டில் தடவி எடுத்துக் கொள்ளவும். இப்போது பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு மிதமான தீயில் உருண்டைகளை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும் .இப்போது சுவையான மொறுமொறுவென உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி.