அவரை மாதிரி பையன் தான் பிடிக்கும்! மனம் திறந்த ராஷ்மிகா !
ராஷ்மிகா மந்தனா : சமீபத்தில் நடைபெற்ற ‘கம் கம் கணேஷா’ ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் ராஷ்மிகா சில விஷயங்களை மனம் திறந்து கூறி இருக்கிறார்.
தற்போது திரைத்துறையில் பிஸியாக வளம் வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது, விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டாநடித்துள்ள படம் தான் ‘கம் கம் கணேஷா’. இந்த திரைப்படம் வருகிற மே-31 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார். இந்த படத்தின் ப்ரி-ரிலீஸ் நிகழ்ச்சியின் போது ஆனந்த் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா மனம் திறந்து பதிலளித்திருப்பார். அந்த விஷயம் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் ட்ரெண்டிங்காக அமைந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் ஆனந்த் தேவாரகொண்டா ராஷ்மிகாவிடம் பல கேள்விகளை கேட்பார். அதிலும் அவர் உங்களுக்கு பிடித்த சக நடிகர் யார் என்று ஒரு கேள்வி கேட்பார்? அதற்கு ராஷ்மிகா கையில் வைத்திருந்த மைக்கை ஓரமாக வைத்து விட்டு சிரித்து கொண்டே ‘நீ ஏம்பா’ என்று வேடிக்கையாக திட்டுவார். மேலும், அங்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ‘ரௌடி ரௌடிஸ்டார்’ என்று கூச்சலிடுவார்கள்.
அதற்கு ராஷ்மிகாவும் சிரித்து கொண்டே எனக்கு ரவுடி பையன் தான் பிடிக்கும் என்று பதிலளித்திருப்பார். ஏற்கனவே விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இருவரும் காதலர்கள் தான் என சினிமா வட்டாரத்தில் கூறி கொண்டிருக்கும் நிலையில் தற்போது, இவர் அளித்துள்ள இந்த பதிலானது இருவரும் மிக நெருக்கமாக தான் இருக்கிறார்கள் என்று அவர் முகமாக கூறுகிறார் என ரசிகர்களால் நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது.