மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. வார தொடக்க நாளில் சவரனுக்கு 520 ரூபாய் அதிகரிப்பு.!
சென்னை: கடந்த வார தொடக்கத்தில் படிப்படியாக குறைந்த வந்த தங்கம் விலை இப்பொது படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. இறங்கும் முகத்தில் சென்று கொண்டிருந்த தங்கம் விலை, வார தொடக்க நாளான இன்று முதல் ஏறும் முகத்துடன் காண்கிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.53,240க்கு விற்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.53,760க்கு விற்பனை ஆகிறது. கிராம் ஒன்று ரூ.65 உயர்ந்து, ரூ.6,720க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலை ரூ.7,190ஆக உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50க்கு விற்பனை ஆகிறது.