நெல்லையை அதிரவைத்த படுகொலை.! தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்.!

Nellai murder Deepak Raja

நெல்லை: மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. 2012இல் கொலை செய்யப்பட்ட தேவேந்திரகுள வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தீபக் ராஜா கடந்த 20ஆம் தேதி நெல்லை கே.டி.சி நகர் பகுதியில் நெல்லை – திருச்செந்தூர் சாலையில் உள்ள உணவகத்தில் தனது காதலியுடன் உணவு அருந்திவிட்டு வெளியே வந்த போது பட்டப்பகலில் ஓர் மர்ம கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்தியிலேயே தீபக் ராஜா உயிரிழந்தார்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். லெப்ட் முருகன், நவீன் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் வரையில் தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரின் உறவினர்கள் கூறிவந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு , காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து இன்று தீபக் ராஜா உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரித்துள்ளனர்.

இதனை அடுத்து  நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டுள்ள தீபக் ராஜா உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால், நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மூன்றைப்பு பகுதி வரையில் நெல்லை மாநகர் முழுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்