கொடூர தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் ! 35 பேர் பரிதாப பலி !

Isrel Rafah War

ரஃபா : இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதால் அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறது.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலரின் கைகளில் இருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதங்கள் ஏந்திய அமைப்புகள் செயலாற்றி வருகிறது. அந்த அமைப்புகளில் ஒன்று தான் ஹமாஸ் அமைப்பு. கடந்த ஆண்டில் இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் 200 நாட்களுக்கும் மேலாக காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் 34,000 மக்களுக்கும் மேல் உயிரிழந்தனர்.  அதில் பாதி பேர் அதாவது 75% சதவீதத்துக்கும் மேல் குழந்தைகள் தான் பலஸ்தீன சுகாதாரத்துறை அப்போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதை கொடூர தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் விமானங்கள் எந்த நேரத்திலும் தாக்குதல்களை தொடங்கலாம் என தகவல் வருவதால் ரஃபா முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.  மேலும், ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களின் மறைவிடம் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்