4,00,000 டாலர் கடன்.! முதலாளி தலையை துண்டித்து கொலை செய்த ஊழியர்.!

Fahim Saleh Tyrese Haspil

அமெரிக்கா: 400,000 டாலர் கடன் தொகையை திருப்பி கேட்டுவிட கூடாது என்பற்காக அமெரிக்க ஊழியர் தனது முதலாளியை 2020இல் தலையை வெட்டி கொலை செய்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட டைரஸ் ஹாஸ்பில் எனும் இளைஞர், 33 வயதான அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஃபாஹிம் சலேவிடம் 2020 ஜனவரியில் பணிக்கு சேர்ந்துள்ளார். சலேயின் நிதி மற்றும் தனிப்பட்ட விஷயங்களை கையாண்ட பெர்சனல் உதவியாளராக டைரஸ் ஹாஸ்பில் செயல்பட்டு வந்துள்ளார்.

ஆரம்பம் முதலே பல்வேறு நிதி மோசடியில் ஈடுப்பட்ட டைரஸ் ஹாஸ்பில், சுமார் 400,000 அமெரிக்க டாலர் அளவுக்கு கையாடல் செய்துள்ளார் என தற்போதைய இறுதி விசாரணையில் தெரியவந்துள்ளது. டைரஸ் ஹாஸ்பிலுக்கு ஓர் காதலியும் இருந்துள்ளார். இந்த நிதி கையாடல் தெரிந்தால் தனது வேலையும் போய்விடும், பிரெஞ்சு காதலியான மரீன் சாவ்யூஸும் பிரிந்து விடுவாள் என்று யோசித்த டைரஸ் ஹாஸ்பில் கொலை அல்லது தற்கொலை என்ற முடிவை எடுத்துள்ளான்

பின்னர் தனது முதலாளியை கொலை செய்ய திட்டமிட்டு, அதற்காக, ஜூலை 2020இல் ஃபாஹிம் சலேவை அவரது அடுக்குமாடி கட்டிடத்திற்கே வரவழைத்து அங்க சலேவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் தலை, கை கால் என துண்டு துண்டாக வெட்டியுள்ளான். பின்னர் அதனை மறைத்துள்ளான். இந்த கொலை வழக்கில், ஆரம்ப கட்டத்திலேயே கைது செய்யப்பட்ட டைரஸ் ஹாஸ்பில் மீது தற்போது தான் (மே 24) அனைத்தும் அமெரிக்க நியூ யார்க் நீதிமன்றத்தில் ஃபாஹிம் சலே வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டுள்ளது.

ஃபாஹிம் சலே காணாமல் போனதாக நினைத்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி, பின்னர் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தலை, கை கால்கள் இல்லாத ஓர் உடலை கண்டறிந்துள்ளனர். பின்னர் அது ஃபாஹிம் சலே தான் என்பதை அப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது நியூ யார்க் நீதிமன்றத்தில் ஃபாஹிம் சலே தரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளன. இந்த கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால் எப்படியும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என் நியூ யார்க் நீதிமன்ற வளாகத்தில் கூறப்பட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்